Wednesday, October 11

இதோ பதில்...


உன் மவுனத்தில் கரைந்த
என் சினம் ;
உன் அமைதியில் அழிந்த
என் திமிர் ;
உன் பார்வையில் கழண்டுபோன
என் உறுதி ;
உன் சிரிப்பில் தொலைந்த
என் வைராக்கியம் ;
உன் நினைவில் மறைந்த
என் தனிமை ;
உன் ஆசையில் படர்ந்த
என் கனவுகள் ;
உன் நினைவில் லயிக்கும்
என் கற்பனைகள் ;
உன் கனிவில் கனிந்த
என் கண்கள் ;
உன் கற்பனைச் சீண்டலில்
என் சிணுங்கல் ;
உன் அன்பில் வெளிப்பட்ட
என் காதல் ;
உன் உள்ளத்தில் ஒன்றிய
என் உயிர் ;
உன் இதம் தேடிய
என் கவிதைகள் ;

இவைகள் சொல்லும்
உன் காதல் நம் காதலாய்
மாறிய  காரணங்களை......