Thursday, October 15

போன்சாய்


கோடி மலர்கள் சூழ
பழங்கள் பல கொடுத்து
பறவைகளின் இனிய இல்லமாய்
அவற்றின் காதல் களிப்பில் கிறங்கி
கை கோர்க்கும் காற்றோடு
ரகசியம் பல பேசி
நட்பு மரங்களின்
செல்ல உரசலில் சிணுங்கி


கம்பீரத்தின் உருவாய்
வளர வேண்டிய விசுவரூபி....




உயரம் குறைத்து
கம்பீரம் கரைத்து
வேர்கள் நறுக்கி
கருப்பை சுருக்கி
சிறு தொட்டிக்குள்
அடைக்கும் அவலம்....

Thursday, July 2

நானறிவேன் அம்மா




நானறிவேன் அம்மா !



இதயம் வருடும்
காதலை விட
இதயம் துடிக்கச் செய்த
தாய்மை பெரிது.....!


மனதை மயக்கும்
காதலை விட
மண்ணில் தவழச் செய்த
தாய்மை பெரிது....!


நானறிவேன் அம்மா!


சிலநாளாய் இதயத்தில்
சுமக்கும் காதலைவிட
பத்துமாதம் கருவில்
சுமந்த தாய்மை பெரிது !


இதயத்திற்கு சிம்மாசனமிடும்
காதலை விட
ஆன்மாவிற்கு கோவில் கட்டிய
தாய்மை பெரிது..!


நானறிவேன்அம்மா !




எனை(நான்) விரும்பும்
காதலை விட
எனை உயிராக்கிய
தாய்மை பெரிது..!


கண்களால் இணைக்கும்
காதலை விட
இரத்தத்தால் பிணைத்த
தாய்மை பெரிது..


நானறிவேன் அம்மா!


உனை வருத்தி என்
இணை தேட நான்
முயலவில்லை..


இதுவே பொருத்தமென
நீ காட்டு...
காதலிக்கிறேன் ..
நானும் தாய்மை உணர.....!