Posts

Showing posts from August, 2010

கனிவாயா??

Image
அன்று.......
மகிழ்ச்சி வெள்ளத்தில் என் மனம்.....
உன் விழி தரிசனம்.....

இன்று....
உன் வார்த்தைக் கங்குகள்
வலிக்க வைக்க
இது தீயின் தருணம்......

அன்று....
கனவை எனக்கு நீ கொடுத்தாய்...
கற்பனைக்கு உயிர் கொடுத்தாய்.....

இன்று....
கனிவாய் என காத்திருக்கிறேன்
அதே காதலோடு.....

என் வாழ்க்கை உன் கையில்....
உன் ஒற்றை சொல்லில் தெரியும்
அது வரமா சாபமா என்று !!!!





தழுவும் தனிமை

Image
தனிமையை நேசிக்கிறேன்
அமைதி விரும்பியல்ல..
வெற்றிடத்தை நிரப்பும்  வேகத்தோடு வரும் காற்றாய்... அணை உடைந்து பெருக்கெடுத்து சீறிப்பாயும் நதி வெள்ளமாய்... முட்டையோட்டிற்குள் இருந்து முட்டி மோதி வெளிவந்த சிறுபறவையாய்...

தனிமைக்கென்றே காத்திருந்தது  நட்ட மறுகணமே விதை மரமாகி அழகிய பூக்களைச் செறிந்தாற்போல என் தனிமையைத் தழுவி  முழுதுமாக ஆக்கிரமிக்கும்  உன் நினைவுகளை ஒருங்கிணைப்பதால்..

என்னுள்ளே....

Image
எனது இந்த கவிதை வார்ப்பு இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


http://www.vaarppu.com/view/2243/






ஏதோ ஒரு இறுக்கம்...
கதறி அழத் தோன்றும் துக்கம்
யாருமே இல்லை போன்றதொரு ஏக்கம்...... இசையில் கரைக்க முயல்கிறேன் வென்றது என்னை புத்தகத்தில் மறக்க நினைக்கிறேன் புதைத்தது என்னை தூக்கத்தில் கூட விடுவதில்லை கனவாக மிரட்டல் அடிக்கடி அடிவயிற்றை அழுத்தும் சோகம் என்ன செய்தாலும் எதுவோ  என்னை தொல்லை செய்கிறது எங்கு சென்றாலும் நிழல்சுமையாய் தலையில் இறங்கும் பாரம் அழ வைப்பதா உன் நோக்கம் ??
இதில் மட்டும் தோற்று விடுவாய்... கண்ணீர் சுரப்பிகள்  வேலைப் பளு மிகுதியால் பழுதாகி கட்டாய ஒய்வெடுத்துச்  சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது இன்றோடு ஒரு முடிவு செய்தே தீருவது  என்ற தீர்மானத்துடன் என்னுள் வலை வீசுகிறேன்.. எத்தனையோ குப்பைகளுக்கு மத்தியில் அழிந்தே விட்டது என்று நான்
நம்பத் துணிந்த  என் ”சுயம்” எங்கோ ஒட்டிக் கொண்ட மிச்சத்தின் துகளாய் ஏக்கப் பார்வை பார்க்கிறது என்னை.....