Saturday, November 20

பிறந்த நாள் வாழ்த்துக்கள்



வலையுலக நண்பர்களே !! அனைவருக்கும் வணக்கம்...நீண்ட இடைவேளைக்கு காரணம், 2 மாத விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளேன்..இன்று என் செல்ல மகள் ஷ்ரேயா பிறந்த நாள்.இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள்.அவர்கள் பள்ளியில் மாணவர்களின் கவிதை மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுவார்கள்..அதற்காக அவள் எழுதிய கவிதை(தெரியாத வார்த்தைகள் மட்டும் சொல்லிக் கொடுத்தேன்). அவள் பிறந்த நாளான இன்று அதை உங்களிடம் சேர்ப்பதில் மகிழ்ச்சி.


                         என் பிறந்த நாள்


வருடத்திற்கு ஒரு நாள்
எனக்குப் பிடித்த நன்னாள்

புத்தாடை உடுத்தி பெற்றோர் ஆசி வாங்குவேன்
கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குவேன்

நண்பர்களோடு சேர்ந்து 
நல்லதொரு விருந்து
களைக்கும் வரை ஆட்டம்
ஆஹா என்ன கொண்டாட்டம்

பரிசுகளோ ஏராளம்
நண்பர்கள் தந்த பொம்மைகள்
தாத்தா தந்த புத்தகம்
பாட்டி தந்த பேனா
மாமா தந்த மிதிவண்டி
அம்மா அப்பா தந்த கைக்கடிகாரம்

என் மனம் கவர்ந்த பரிசு எது?
அல்வா போன்ற பரிசு அது !
அன்பால் தந்த பரிசு அது !
என் அன்புத் தங்கை தந்த முத்தம்  அது !!!
விலைமதிப்பற்ற பரிசு அது 
இதுபோல் வேறு கிடைத்திடுமா????