Posts

Showing posts from October, 2016

குருதித் திவலைகள்

Image
பெருமழையில்கழுவப்பட்டு பழுத்துச்சிவந்தரோஜா நுரையீரல்முழுதும்மணம் நிரப்பிடும்ஆவேசத்துடன் செவ்விதழ்நுனியில் முகம்பதித்துமுகர்ந்தேன்
வெறும்உச்சிமுகர்தலாய்இல்லாமல் உள்வரைமுகர்ந்துவிட்டேன்போலும் முகத்தில்அடித்தாற்போல் வேர்பிடித்தவெட்டுத்துண்டில் ஒட்டியிருக்கும்பூர்வீகவீச்சம்.தரிசனம்

Image
சுயம் தொலைத்த கழிவிரக்கத்தில்  துவண்டு போயிருந்த நேரம் கிடைத்த அரிய வாய்ப்பில் வெற்றிடத்தை நிரப்பும்  காற்றின் வேகத்துடன் தனிமையை நோக்கி பயணம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று  பேசத் தேவையில்லை அடுத்தவருக்கென்றே வார்த்தைகள் தேடி  அலைய வேண்டியதில்லை ஒவ்வொருத்தருக்குமாக முகமூடிகளை  மாற்றிப் போடும் அவஸ்தையுமில்லை. உள்ளத்தோடு சேர்ந்து மட்டுமே  உதடுகள் சிரித்துக் கொள்ளலாம்.
உணர்வுகளைப் புதுப்பிக்கும் தருணமாக  எனக்குள்ளே எட்டிப் பார்த்து  அலசும் ஏகாந்த வேளையில் இருட்டுக்குள் பயமுறுத்தும்  ஆந்தையின் கண்களாய் மனம் விழித்துக்கொண்டு  வெறித்துப் பார்க்கத் தொடங்குகிறது.
சுட்டும் விழி எரிதழலின் வெம்மைத் தாக்கம் தவிர்க்க வெளியேற  எத்தனிக்கையில்  ஆக்டோபஸின் கரங்களாய்  எட்டுத் திக்கில் இருந்தும்  கொஞ்சம் கொஞ்சமாக  ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன கேள்விகளும் குற்றச்சாட்டுகளும்
மூச்சுத் திணறிப் போய்  தனிமையைத் தள்ளிவிட்டு வெளியேறுகிறேன் தப்பிவிட்ட நிம்மதியுடன்.

சுவடுகள்

Image
எப்படி? எங்கு? யாருக்கு? என்று? எதுவும் தெரியாது எங்களுக்கு
பிறப்பின் அத்தனை சுவடுகளும் மொத்தமாக அழிக்கப்பட்டு பிறந்துவிட்டோம் என்னும் உண்மையை மட்டுமே சுமந்து வாழ அனுமதிக்கப்பட்டுள்ளோம்.
தொழில்நுட்பங்கள் தொடர்ந்து முன்னேறுகிறதாம் பிள்ளைகள் இல்லாதவர்களுக்குப் பெற்றுத் தருகிறதாம் அறிவியல். பெற்றோர்களைப் பெற்றுத் தருமா என்று காத்திருக்கிறோம்
இரக்கப் பார்வையும் கருணைப் பேச்சுகளும் மட்டுமே இலவசமாகக் கிடைக்கும் உலகில். சமூகத்தின் சங்கிலித் தொடரில் அறுந்து போன சரங்களாய் விலாசங்கள் அற்றுப் போய் வாழும் எங்கள் இல்லங்களுக்கு வந்துதான் தங்களின் உள்ள விசாலத்தைப் பறைசாற்றிப் பிறந்தநாள் கொண்டாடி அவரவர் பிறப்பின் சுவடுகளை அழுந்தப் பதிந்துவிட்டுச் செல்கின்றனர்.

நினைவுத் துளிகள்

Image
உனக்குள் மொட்டுவிட்ட காதல் மலர் இதழ் விரித்து மணம் பரப்பியது உன்இதழ் உதிர்த்த வார்த்தைகளால்தான் முதலில் சொன்னதென்னவோ நீதான்... அது என்னுள் எங்கோ முடங்கிக் கிடந்த
நேசநெருப்பை உரசிச் சென்றது....
சிப்பிக்குள் மழைத்துளியாக உன் நினைவுகளைப் பொதிந்திருந்தேன் மனதுக்குள் காதல் முத்தொன்று அரும்பப் போவதை அறியாமலேயே...

துக்கம் புகுந்த வீடு

Image
சாவு வீட்டிற்கென்றே சில இலக்கணங்கள் இருக்கின்றன. அவசரம் அவசரமாக அந்த வீடு முழுக்க துக்கம் தெளிக்கப்படுகிறது. வெடித்துக் கதறி அழுவதெல்லாம் நாகரிகத்தால் கட்டுப்படுத்தப்பட்டு அடைத்து வைக்கப்பட்ட உணர்வுகளின்   நிசப்த வலி சுமந்திருக்கும் சடங்குகளின் கைதிகள் ஒரு பக்கம். அரவம் கேட்டதும் பறந்து செல்லும் பறவையாய் தங்களின் மரண பயத்தை விரட்டும் முயற்சியில் இதுவரை அறிந்த அத்தனை மரணங்களைப் பட்டியலிடும் அலசல்கள் ஒரு பக்கம்.
ஆங்காங்கே சிரிப்பைத் துடைத்த முகங்களும் மூக்கை உறிஞ்சும் சப்தங்களுமாக சாவு வீட்டுச் சம்பிரதாய அலங்காரங்கள் செய்யப்பட்டுவிட்டன. பசியாறுவதும் படுத்துறங்குவதும்கூட பதுங்கிப் பதுங்கித்தான் நடக்கிறது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக்கூட அடுத்த வீட்டிற்கு அனுப்பியாகிவிட்டது துக்கச் சூழலைக் கட்டிக்காக்க. அதிகப்படியான அழுத்தங்கள் பதித்த முகங்களுடன் அமைதியாக வருவதும் சொல்லாமல் போவதுமாக ஒரு மெளன வருகைப் பதிவேற்றமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மெல்லிய அடிநாதமாக இழையோடிக் கொண்டிருக்கும் மரணம் மட்டுமே அங்கே இயல்பானதாக இருக்கிறது.

கரையோரக் கனவுகள்

Image
ஆளுக்கு ஒரு கையில் அலைபேசியை அழுந்தப்பற்றியிருக்க மீதமிருந்த இரு கைகளுக்குள்ளும் தன்னிரு கைகளை இறுக்கிக்கொண்டு உற்சாக நடையோடு உள்நுழைகிறாள்
காற்றின் சலசலப்பு காதுகளை நிறைக்க கால்களைத் தொட்டுச் செல்லும் அலைகளுக்குள் துழாவி எடுக்கும் சிப்பியைக் கொண்டு அலங்கரித்துப் பார்த்த மனக்கோட்டையை மணலில் கட்டிவிடும் உத்வேகத்துடன் வீறுநடை போடுகிறாள்!
வீசும் பந்தை மறுபடி தன்னிடம் சேர்க்கும் அலைகளோடு கால்கள் புதைய விளையாடி உடல் முழுதும் மணலும் உப்புநீருமாய் அப்பிக் கொண்டு உருளத் தோன்றும் ஆசைகளைச் சுமந்தபடி ஓடுபவள் சட்டென்று நிறுத்தப்படுகிறாள்.
அப்பாவின் மடியில் உட்கார்ந்துகொண்டு

தொடர்பு எல்லைக்கு அப்பால்

Image
அலைபேசியில் தொடர்புகளைத் தொடும் போதெல்லாம் என்னை ஒரு நிமிடம் உலுக்கிவிட்டுச்  செல்லும் அவள் எண்
அந்த எட்டு எண்களில்  ஒளிரும் சிரித்த முகம்  பல கதைகள் பேசிவிட்டுப் போகும்
என்னவோ தெரியவில்லை எத்தனையோ புகைப்படங்கள் கையில் இருந்தும் என் நினைவை வருடுவது ஒருமுறை வெளிநாடு செல்ல கை அசைத்தபடியே விடைபெற்ற  அந்தப் பரவச முகம்… என் மனதில் மட்டுமே பிரத்தியேகமாக எடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டது..
புற்றுநோய் அரக்கனிடம் போராடித் தோல்வியைத் தழுவித் தொடர்பு எல்லைக்கு அப்பால் அகன்று ஆகிவிட்டன சில ஆண்டுகள்… அவளுக்கும் எனக்குமான தொடர்பு மொத்தமாக அழிந்துவிடுமோ என்ற எண்ணத்தில் மனதில் சுமப்பதைவிட அலைபேசியில் இருப்பது ஒன்றும் அத்தனை கனமில்லை என்பதால் அழிக்க மனமில்லாமல் அப்படியே விட்டுவிட்டேன் அவளுடைய தொடர்பு எண்ணை….

இரண்டும்கெட்டான் வயது

Image
முப்பதுகளின் முடிவுகளில் முந்திக்கொண்டு எட்டிப் பார்க்கும் முன் நெற்றி நரை..
கண்ணாடித் தோழியின் பிம்பத்தைப் பொய்யாக்கி இருட்டு அறையில் உண்மையை வெளிச்சமாக்கும் புகைப்படங்கள்.. பதின்ம வயதின் தொடக்கம்போல் கண்ணாடியே கதியென்று கிடக்கும் பருவம்...
அன்று, அழகென்ற சொல்லின் அர்த்தம் தேடும் அத்தனை செயல்களும் சுரப்பிகளின் கட்டுப்பாட்டில்...
இன்று, சுருக்கங்களும் நரைவரிகளுமாய் இளமையை அபகரிக்கத் திட்டமிடும் சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள்...
அனுபவங்களும் நினைவுகளும் மழைத்துளிகளாய் மனச்சிப்பிக்குள்  புதைந்து அழகோடு மிளிரும்  முத்தாக உருமாறும் முதுமையை ஏற்றுக்கொள்ளப்பக்குவப்படும்வரை  இதுவும் இரண்டும்கெட்டான் வயதுதான்.

பிரிவுகளின் இடைவெளியில்

Image
பலநேரங்களில்அத்தனை அவலத்திற்கும்உள்ளுக்குள்ளேயே புழுங்கத்தான்முடிகிறது.. அதிருப்தியும்ஆதங்கங்களும் மனதைஆக்கிரமிக்க நிகழ்வுகளால்நீட்டிக்கப்பட்ட இயலாமையுடன்கைகோர்த்து கோபநெருப்பைஉள்ளடக்கி கனன்றுகொண்டிருக்கிறது..
ஒன்றுக்குள்ஒன்றாக இருந்துகொண்டே இடைவெளியின்சிறுபிரிவில் உயிர்வாழும்தீக்குச்சிகளாய் பிரிவுகளின்தயவால் வாழும்மனிதஉறவுகள் !!


புகுந்த வீடு

Image
மணமான நாள் முதலாய் இதுதான் உன் இடமென மனதிற்குள் புகுத்திவிட எத்தனையோ பிரயத்தனங்கள் என்னைச் சுற்றியும் எனக்குள்ளேயும்...
புதிய உறவுகளை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக எப்போதும் முதல் வரிசையில் எனக்காக நின்றிருந்த உதிர உறவுகளுன் நட்புகளும் சற்றே பின்னுக்கு நகர எறும்புகளால் அரிக்கப்பட்ட கோலமாய் சுயவிலாசம் அற்றுப்போய் நின்றேன்...
குறையொன்றும் இல்லைதான் நிறையென்றும் சொல்ல முடியாதபடி எதுவோ நழுவிவிடுகிறது...
எப்படியோ எங்கே தென்பட்ட புள்ளி ஒன்றைப் பற்றினேன்... பிடிபட்ட புள்ளிகளை எல்லாம் இணைக்கத் தொடங்கி புதிய கோலமாக உருவெடுத்தது..
பூத்துக் குலுங்கும் நேரத்தில் வேரோடு பிடுங்கி வேறிடத்தில் நடப்பட்டவள்தான்..
செழித்து வளர்ந்து கிளை பரப்பியது இடப்பட்ட உரத்தினால் என்பதாகவே அனைவரும் எண்ணிக்கொள்ளட்டும்.
வேரோடு ஒட்டிக்கொண்டு வந்த சில மண் துகள்கள்தான் என் உயிருக்கு ஆதாரமானவை என்பது எனக்குள் மட்டுமே புதைந்த ரகசியமாகவே இருக்கட்டும்.