Posts

Showing posts from November, 2016

எங் கதெ - இமையம்

Image
இமையத்தின் படைப்பில் நான் வாசிக்கும் முதல் படைப்பு என்பதால் சில எதிர்பார்ப்புகளுடனேயே வாசிக்கத் தொடங்கினேன். தலைப்பு எங்கதெ என்று இருப்பதால் கண்டிப்பாக பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு நாவல் என்பது கூடுதல் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டியது. 
விபத்தில் கணவனை இழந்தவள் கமலா. அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை அவளுக்கு கிடைக்கிறது. தன் இரட்டைப் பெண் குழந்தைகளோடு வேறொரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் வேலைக்குச் சேர்கிறாள். ஊரிலிருக்கும் ஆண்கள் வயது வித்தியாசம் இன்றி அவளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடும் வேளையில், அதே ஊரில் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இளைஞனுக்கும் அவளுக்கும் உறவு ஏற்படுகிறது. பள்ளி குமாஸ்தாவாக வேலை செய்யும் அவள், தன் மகள் பள்ளி வயதை எட்டும் வரையில் விநாயகத்தையே நம்பி இருக்கிறாள். பின்னர் கடலூரில் சி.இ.ஓ அலுவலகத்திற்கு மாற்றம் வரும் போது அவளது சூழலும் சார்புகளும் இயல்பாகவே மாறுகின்றன.கமலாவை மனைவியாக நினைத்து வாழும் விநாயகத்தின் வாழ்வில் மூன்றாமவன் நுழைகையில் அவனுடைய கோபம், குரோதத்தின் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பது"எங்…

புத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவன்

Image
கவிஞர் அய்யப்ப மாதவனின் ’புத்தனின் விரல் பற்றிய நகரம்’ கவிதை நூல் சில நாட்களாக என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கவிதைகள் மறுவாசிப்பு, மறுவாசிப்பு என என்னை உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன. மீள் வாசிப்பில் பல கவிதைகள் பரிமாண மாற்றங்கள் தந்து நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன. அந்தத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்…
கருங்கல் பழக்கங்கள்
கருங்கல்லில் ஒளிந்திருக்கும் கடவுளை தரிசிக்க மணிக்கணக்கில் தவம் மனம் பதற நிமிட நேர தரிசனம் கவிதைகள் கைகூப்பி வணங்கினால் கடவுளின் கூலியாள் விரட்டுகிறான் அருள் வாங்கிப்போகிறது முகம் சாம்பல் பூக்கும் நெற்றியுடன் கருங்கல் பழக்கங்கள்.
  கவிஞனாகிய அற்புதம்
மஞ்சளாக மாறுகிற நிலவின் அதிசயத்தில் வண்ணங்களைக் குறித்து இதயத்தைக் கிளறுகிற அந்தியில் சாலையில் மஞ்சளுடுப்பில் மஞ்சள் பூச்சூடி வடிவாகச் செல்லும் பெண்ணில் நிலவை விரல் நீட்டி குழந்தமையை நினைவூட்;டும் குழந்தையில் பிரிந்த காதலியின் கண்ணீரில் உதிர்த்துப்போட்ட இலைகளின் குவியலுக்குப்பின் நிற்கும் மொட்டைமரத்தின் பேரிழப்பில் குப்பைகளைக் கிளரும் பூனைகளின் பசியில் கோடையைத் தாங்கும் இலையடர்ந்த பச்சை இலைகளின் கவர்ச்சியில் கண்களைக் குச்சியி…

கோடைகாலக் குறிப்புகள் - சுகுமாரன்

Image
”எறும்புகள் சுமந்து போகும் பாம்புச் சட்டை போல நகர்கிறது வாழ்க்கை”
“தலையிலிருந்து முதுகெலும்பு வழியாக வெட்டப்பட்ட பிணம் நான்”
“இப்போது அன்பு சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனை”
”பூக்களில் வழியும் ரத்தத்துக்கும் துடைக்க நீளும் சுட்டுவிரலுக்கும் இடையில் பறந்து தடுமாறுகிறது கிளி”
       நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரியும் வாழ்வின் சூட்சமங்கள், சுயம் சார்ந்த துக்கம், உள்ளத் தகிப்பு, அகச்சீற்றம், தனிமை, குடும்ப உறவுகளின் சிதைவு, இயற்கையுடன் இயைந்து உறவுகொள்ளுதல் என ஒரு தனிமனிதனின் உள் மற்றும் வெளி உலக அனுபவங்களை நுட்பமான அவதானிப்புகளின் வழி அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கும் எதார்த்தமான கவிதைகள்.
நிகழ்
விலக்கினாலும் கவிகிறது புகை எதிலும் இடறிக் கொள்ளாமல் களைந்து திரியவே தவிப்பு கண்ணாடி முன் நின்றால் கழுத்துக்கு மேலே வெறும் பெயர் என்னைக் காணாமல் துடித்து உள்கசியும் ரத்தத்திலும் சீழிலும் மட்கும் கணங்கள் கால்கள் சிக்கிப் பறக்கத் தத்தளிக்கும் நான்…
       கவிதைகளுடன் உரையாடி அதை அசைபோடும் அனுபவம் நல்கி என்னை ஆக்கிரமித்திருக்கின்றன சுகுமாரனின் ’கோடைகாலக் குறிப்புகள்’

குற்றப் பரம்பரை - வேலராமமூர்த்தி

Image
கள்ளர் இன மக்களின் வாழ்வை, அவர்களின் சமுதாய நிலைப்பாட்டை, அவர்களுடன் வாழ்ந்த மற்ற சமூகத்தினர் என வெவ்வேறு தளங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை குற்றப்பரம்பரை என்னும் நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. முதல் முறை வாசித்தபோது கதையும், உணர்வுகளும், விறுவிறுப்பான நடையுமாக ஒரே மூச்சில் வாசிக்க வைத்தது நாவல். மறுவாசிப்பில் எதார்த்த மொழி, சிக்கன வார்த்தைப் பிரயோகம், ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் தர்க்கங்களை எழுத்தாளர் வெளிப்படுத்தி இருக்கும் விதம் ஆகியவை புரிபட்டன. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்த கள்ளர்கள் சமூகம் மற்றும் அவர்களின் வாழ்வியல், சுக துக்கங்கள் என்று அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார். காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் கள்ளர் கூட்டத்தைப் பிடிக்க முயலும் சர்காரிடம் இருந்து சில பல உயிர்களைப் பலிகொடுத்து தப்பி,கொம்பூதி என்னும் மலைக்கிராமத்தில் தங்கள் மறுவாழ்வைத் தொடங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். தங்களுக்கு இணக்கமாக வாழும் பெரும்பச்சேரி கிராமத்திற்கு உதவி செய்யப் போய் பெருநாழி கிராமத்தின் எதிர்ப்பைச் ச…

சிறகுகள் முறியும் - அம்பை

Image
பெண்களின் இயல்பான சுபாவத்தையும், அவர்கள் இயல்பைத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாவதையும், சமூகம் அவர்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் மனத்தடைகளையும் தனது எழுத்தின் மூலம் அடையாளப்படுத்தி இருப்பவர் அம்பை. பெண்களின் நுண்ணிய உணர்வுகளையும், பெண்களுக்கு எதிரான சமூகக் கோட்பாடுகளின் மீதான கோபங்களையும் வெளிப்படுத்தும் கதை ‘சிறகுகள் முறியும்.’ திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கங்களை உண்டாக்குகிறது என்பதையும், இது போன்ற சமூக நிலைப்பாடுகளால் பெண்கள் எப்படி எல்லாம் பாதிப்படைகிறார்கள் என்பதையும் ஒரு பெண்ணின் உணர்வுகளின் வாயிலாகத் தெளிவாகச் சித்தரித்திருக்கும் கதை.  1970 களில் இல்லத்தரசிகளின் நிலையையும் வாழ்வையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. வழக்கமாக எல்லா பெண்களையும்போல் திருமணத்திற்குப் பிறகு அம்மாவிடம் தான் இன்னும் அணுக்கமாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தையும், அம்மாவைத் தான் படுத்திய பாட்டையெல்லாம் நினைத்து அவள் அருகாமைக்கு ஏங்குவதையும் இயல்பாகச் சொல்லியிருக்கிறார். தன் சுயசிந்தனைக்கு இடம் கொடுக்காத பல சட்டங்களை உருவாக்கி வைத்திருக்கும் சமூகத…

அவர் அப்படித்தான்

Image
அலுவலக இருக்கையில் அமர்ந்ததும் பின்னுக்குச் சாய்ந்து கண்களை மூடினேன். அத்தனை கவலைகளையும் துடைத்துவிடும் முயற்சியாய் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. மிகவும் அயற்சியாக இருந்தது. இந்தச் சண்டை எப்படி ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. எங்கெங்கோ சென்று எதிலோ வந்து முடிந்திருக்கிறது. எதற்கு, ஏன் என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வீசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அவரவர்களுக்குத் தேவையான அர்த்தங்கள் பெற்று பூதாகரமாகி மனதை ஆக்கிரத்துவிடுகின்றன. கணினியை உயிர்ப்பித்தேன். வேலைகள் வரிசை கட்டிக்கொண்டு நின்றன. சே! என்ற ஒரு தலையசைப்பில் மனத்தின் கூச்சல் அனைத்தையும் உதறிவிட்டதாய் நினைத்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
     சில்லரைச் சண்டைகள் எப்போதும் நடப்பதுதான் எங்களுக்குள். ஆனால் அதற்குப் பிறகான தாக்கம் இப்போதெல்லாம் அதிகரித்து விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. யார் முதலில் பேசுவது என்பதில் தொடங்கி, ஈகோ தலைதூக்க சமாதானத்திற்கான காலமும் நீண்டு கொண்டே போகிறது. அலுவலகம் வந்ததில் இருந்து பத்தாவது முறையாக அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். அவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்திகூட இல்லை. ஏமாற்றம் என…

இந்த வயதில்…

Image
”இந்த வயசுல இப்படி நடந்துக்கறீங்களே, உங்களால சும்மா இருக்க முடியாதா?” வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் குமாரின் கேள்விகளே கண்ணபிரானை வரவேற்றன. அவர் எதுவும் பேசவில்லை. தலை குனிந்தவாறே ஹாலைக் கடந்து செல்ல முயன்றார். சமையலறையில் இருந்து மருமகளின் குரல், “இப்படியே போனா என்ன அர்த்தம்? கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கறீங்களா? உங்களுக்கு என்ன குறை வச்சோம்? ஏன் இப்படி எங்க மானத்த வாங்கற மாதிரி நடந்துக்கறீங்க?” அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. இன்றைக்கு நேற்று இல்லை, ஆறு மாதங்களாகவே இப்படித்தான் நடக்கிறது. அவர் சொன்ன பதில் எதுவும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை போலும். கேள்விகள் துரத்திக் கொண்டே இருந்தன. இப்போதெல்லாம் பதில் சொல்வதையே நிறுத்தி விட்டார். அறைக்குள் சென்று கதவைச் சாத்தும்போது ”இதெல்லாம் சரிப்பட்டு வராது குமார், பேசாம முதியோர் இல்லம் எதிலயாவது சேர்த்திடலாம் “ என்று மருமகள் சொல்வது கேட்டது.     
சட்டையைக் கழற்றி மாட்டும்போது கண்ணாடியில் அவர் உருவத்தைப் பார்த்தார். சவரம் செய்யாத முகமும், கண்களைச் சுற்றிய கருவளையுமும், தளர்ந்து போன உடலும், ஆறுமாதத்தில் இரண்டு மடங்கு வயது கூடிவிட்ட…

இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி - சங்க இலக்கியம்

Image
மனப்பாடப் பகுதியில் மதிப்பெண்களுக்காக படித்தது மட்டுமே எனக்கும் சங்க இலக்கியத்திற்குமான உறவு. கொடுக்கப்பட்ட உரை விளக்கம் தாண்டி எதையும் சிந்திக்க விடாத தமிழ் ஆசிரியர்களின் மொழிப்பற்று ஒரு புறம். மற்ற பாடங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய காரணங்களால் தமிழ் என்றுமே மனப்பாடம் மட்டும்தான் என்றாகிப் போய் ரசனைக்கு அங்கே வேலையே இல்லாமல் போயிருந்தது. அவ்வப்போது சங்க இலக்கியம் என்ற வார்த்தை காதில் விழும் போதெல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசை தலை தூக்கும். ஆனால் மனப்பாடப்பகுதி தந்த மனக்கசப்பு திரை போட்டு அதை அடக்கிவிடும். ஆனால் ஆர்வம் மட்டும் விட்டபாடில்லை. சங்க இலக்கியம் வாசிக்கவில்லையே தவிர அதைப் பற்றிய வாசிப்பு அனுபவங்கள் எங்கே பார்த்தாலும் படித்துவிடும் ஆர்வம் இருந்தது. அவ்வாறு நிறைய கட்டுரைகள் படித்து மேலும் ஆர்வம் மேலிட குறுந்தொகை வாசிப்பில் நுழைந்தாகிவிட்டது. இத்தனை நாட்களாய் இவற்றையெல்லாம் வாசிக்காமல் விலக்கி இருக்கிறோமா என்று எண்ணி வெட்கும் அளவிற்கு குறுந்தொகையின் வீரியம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.      மனித உணர்வுகள் அனைத்தும் அகம் புறம் என்ற இரண்டிற்குள் அடங்கிவிடுகிறது. சங்க…